வருமான வரி ரிட்டர்ன் refund வட்டி கிடைக்கும்னு ஆசையாக இருந்த பல லட்சம் பேருக்கு ஏமாற்றம்
சென்னை: வருமான வரி ரீஃபண்டுக்காக நீங்கள் இன்னும் காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கு வருமான வரி கணக்கு refund வழங்கப்படவில்லை. செப்டம்பர் 16 அன்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும், பல வரி செலுத்துவோர் இன்னும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை. சிலருக்கு ஏற்கனவே ரீஃபண்டு கிடைத்திருந்தாலும், பலர் இன்னும் காத்திருக்கிறார்கள்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரி ரீஃபண்டு தாமதங்களை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதே தாமதத்திற்கான முக்கிய காரணம் என்று CBDT கூறியுள்ளது. நிலுவையில் உள்ள பெரும்பாலான ரீஃபண்டுகள் இந்த மாதத்தின் பிற்பகுதியிலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தாமதமான ரீஃபண்டுகளுக்கு வழக்கமாக வட்டி கிடைக்கும் என்றாலும், சில சமயங்களில் வரி செலுத்துவோருக்கு வட்டி கிடைக்காமல் போகலாம். மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் இது குறித்து விளக்கினார். "ஆம், வரி செலுத்துவோருக்கு ரீஃபண்டு தாமதமானால் வட்டி கிடைக்கும். ஆனால், தாமதத்திற்கான பொறுப்பு வரி செலுத்துவோரையே சார்ந்திருந்தால், அந்த காலத்திற்கான வட்டி கிடைக்காது" என்று அவர் கூறினார்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. அந்த தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டு, அதிகப்படியான TDS அல்லது முன்பண வரி செலுத்தப்பட்டிருந்தால், ரீஃபண்டுக்கான வட்டி ஏப்ரல் 1 முதல் ஆண்டுக்கு 6% வீதம் கணக்கிடப்படும். ஆனால், ஜூலை 31க்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டால், ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வட்டி கணக்கிடப்படும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தா

தாமதமான வருமான வரி ரீஃபண்டுகளுக்கு வரி செலுத்துவோருக்கு எப்போதும் வட்டி கிடைப்பதில்லை. உங்களுக்கு வட்டி கிடைக்குமா என்பது வருமான வரிச் சட்டம் பிரிவு 244A-ன் கீழ் உள்ள சில விதிகளைப் பொறுத்தது.


Joy sweety

